மனம் எனும் அற்புத சக்தி

 

                                                                            📖

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய், நீ பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாக ஆகிறாய், நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிறாய், நமது எண்ணங்களே நமது வாழ்கையின் தீர்மானம் ...!

                                              -சுவாமி  விவேகானந்தர்.



   பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சக்தி நம் மனம் தான், அதனை முறையாக கையாளும்பொழுது நம் வாழ்கையின் உயிரோட்டத்தை காண முடியும். நம் மனம் ஒருபொழுதும் நமக்கு தீங்கு விளைவிப்பதில்லை, நம் எண்ணங்களையே அது பிரதிபலிகிறது .நம் மனதின் செயல்முறைகள் எப்பொழுதும்  வாழ்வின் உயிரோட்டம் குறித்தும் ஆக்கபூர்வமானதாகவும், அமையவேண்டும், நம் வாழ்கை  முழுவதும் ஒவ்வொரு நொடியும் நம்முடன் உரையாடிக்கொண்டே இருக்கும் ஒரே உறவு நம் மனம் தான்.  உணர்வுகள் ,அறிவிப்புகள்,வலியுறுத்தல்கள், எண்ணங்கள்  ஆகியவற்றின் மூலம் நமது  மனம் நம்மிடம் பேசிக்கொண்டே இருக்கும், மேல்நோக்கி செல் ,மேன்மை அடை ,துணிந்து இறங்கு,முன்னோக்கி சென்று வாழ்வில் உயர்ந்த சிகரங்களை தொடுமாறு நம்மிடம் எப்போதும் கூறிகொண்டே இருக்கும், நம் மனம் எல்லா விதத்திலும் அறிவார்ந்தது, அணைத்து கேள்விகளுக்கான விடைகளையும் அது அறிந்து வைத்துள்ளது, 

நமது எண்ணங்களின் பிரதிப்பளிபே நம் செயல்கள். 

முட்டையிட்டு கடற்கரை மணலில் மூடிவிட்டு சென்ற ஆமை  எப்பொழுதும் தன்  முட்டைகளின் சிந்தனையிலேயே இருக்குமாம், முட்டைகளின் மீது ஆமை கொண்டிருக்கும் சிந்தனையிலேயே அம்முடைகள் பொரிக்க தொடங்கிவிடுமாம்  அதுபோல  நம் கொண்டிருக்கும்  எண்ணங்களின் வலிமையை பொறுத்தே  அது செயல் உருவம் பெரும் , நாம் அடைய நினைக்கும் அனைத்தும் நம் சிந்தனையில் ஓடிகொண்டே இருக்க வேண்டும்,  அதை பற்றி நம் மனதிடம் அனுதினமும் உரையடிகொன்டே இருக்க வேண்டும் நாளடைவில் எண்ணங்கள் வண்ணங்களாக செயல் உருவம் பெரும்.

                       விதைப்போம் நல் எண்ணங்களை மனதில் .!



                                                                                                             By

                                                                                                                Rajasekar krishnan.





Comments